Tamilnadu
”2026 தேர்தலில் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத்தானே மக்களிடத்தில் தரம் தாழ்த்தி வருகிறார். அதற்கு ஏன் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும். 2026 தேர்தலில் எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் ரகுபதி,”தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்று சொன்னால் திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும். என்பதை இந்த நான்கு ஆண்டுகளில் நிரூபித்துள்ளோம். சொன்னதை செய்துள்ளோம், செய்வதை தான் சொல்லியுள்ளோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது கிடையாது.
பா.ஜ.கவின் C டீம்தான் விஜய்.இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். முன்பு ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள். இன்று அரசியல் களத்திற்கு வந்து இருக்கிறார்கள்.
தமிழர்களின் வரலாற்றையும், திராவிடத்தின் வரலாற்றையும் தற்போதுள்ள இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காக நாங்கள் அறிவுத் திருவிழாவை நடத்தினோம். இது பற்றி எல்லாம் சிலருக்கு புரிதல் கிடையாது. அவர்களது ஒரே எண்ணம் ஆட்சியை கைப்பற்றுவது. ஆட்சிக்கு வந்து உட்கார வேண்டும் என்பதுதான். அதை தவிர தமிழர்களைப் பற்றியோ தமிழர்களின் கொள்கையை பற்றியோ பண்பாட்டைப் பற்றியோ கலாச்சாரத்தை பற்றியோ அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது.
விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத்தானே மக்களிடத்தில் தரம் தாழ்த்தி வருகிறார். அதற்கு ஏன் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும். 2026 தேர்தலில் எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி : யார் இந்த சூரிய காந்த்?
-
குரு தேக் பகதூர் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழா! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கடிதம்!
-
ரூ.11.81 கோடியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
3.35 லட்சம் வாக்காளர்கள் எப்படி சேர்க்கப்பட்டார்கள்?: தேர்தல் ஆணையத்தின் முறைகேடு- பரகலா பிரபாகர் கேள்வி
-
அரசு அலுவலர்களை தற்கொலைக்கு தள்ளும் SIR : தேர்தல் ஆணையத்திற்கு முரசொலி கண்டனம்!