Tamilnadu
3.35 லட்சம் வாக்காளர்கள் எப்படி சேர்க்கப்பட்டார்கள்?: தேர்தல் ஆணையத்தின் முறைகேடு- பரகலா பிரபாகர் கேள்வி
பீகார் தேர்தல் முடிவுக் முன்பு, SIR பணிக்கு பிறகு பீகாரில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ ஆவணத்தில் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை 7.45 கோடியாக இருக்கிறது.
ஆரம்பத்தில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், தேர்தலில் 7.45 கோடி பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளது. அதாவது இறுதி வாக்காளர் பட்டியலை விட சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை எப்படி உயர்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், 21 கேள்விகளை எழுப்பி தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி இருக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பொருளாதார வல்லுநகர் பரகலா பிரபாகர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 12ஆம் தேதியன்று தேர்தல் ஆணையம் பீகார் தேர்தல் வாக்கு சதவீதம் 67 புள்ளி ஒன்று மூன்று என வெளியிடுகிறது. அதில், தபால் வாக்குகள் இல்லை. பின்னர், நவம்பர் 13ஆம் தேதி, பீகார் தேர்தல் வாக்குப்பதிவு 67.13 என மீண்டும் கூறுகிறது. அதிலும் தபால் வாக்குகள் குறித்த தகவல் இடம்பெறவில்லை. ஆனால், நவம்பர் 11ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் 66 புள்ளி 91 சதவீத வாக்குகள் பதிவானது என்று கூறப்பட்டுள்ளது.
இப்படி, தபால் வாக்குகள் பற்றி எந்தவித விபரத்தையும் தெரிவிக்காத தேர்தல் ஆணையம், தேர்தல் முடிவுகளை அறிவித்த 5 நாட்களுக்குப் பிறகு, அஞ்சல் வாக்குகள் குறித்த எண்ணிக்கை திடீரென இடம்பெற்றதாகவும், இதன் மூலம், 12 மற்றும் 13 தேதிகளில் வெளியிடப்பட்ட வாக்கு சதவீதங்கள் முற்றிலும் உண்மையானவை அல்ல என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மொத்தம் எத்தனை தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை தேர்தல் ஆணையம் எங்கும் தெரிவிக்கவில்லை என்று சாடியுள்ள பரகல பிரபாகர், தாங்கள் கூறும் எண்ணிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நாட்டு மக்களிடம், தனது முடிவுகளை தேர்தல் ஆணையம் திணிப்பதாக விமர்சித்துள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட அடுத்த 10 நாட்களுக்குள் 3 லட்சத்து 35 வாக்காளர்கள் எப்படி சேர்க்கப்பட்டார்கள்? என்பன உள்ளிட்ட 21 கேள்விகளை அவர் எழுப்பி, தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியுள்ளார்.
Also Read
-
புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி : யார் இந்த சூரிய காந்த்?
-
குரு தேக் பகதூர் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழா! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கடிதம்!
-
ரூ.11.81 கோடியில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”2026 தேர்தலில் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
அரசு அலுவலர்களை தற்கொலைக்கு தள்ளும் SIR : தேர்தல் ஆணையத்திற்கு முரசொலி கண்டனம்!