Tamilnadu
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நிறுவனம் (Guidance Tamil Nadu), உலகளாவிய திறன் மையங்களை (GCCs) நிறுவுதல் மற்றும் விரிவாக்குவதில் உலக அளவில் முன்னணியில் உள்ள ANSR நிறுவனத்துடன் இன்று (20.11.2025) ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது. ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் மற்றும் அதிவேகமாக வளரும் தொழில் நிறுவனங்களுக்காக உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres-GCC) நிறுவுவதில் ANSR நிபுணத்துவம் பெற்றது.
இந்தக் கூட்டாண்மை, தொழில்நுட்பம், புதுமை மற்றும் உயர் மதிப்புள்ள உலகளாவிய சேவைகளுக்கான உலகின் மிகவும் கவர்ச்சிகரமான இடங்களுள் ஒன்றாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழும்.
200-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்களை (GCC) நிறுவியுள்ள, 2 இலட்சத்திற்கும் அதிகமான உலகளாவிய நிபுணர்களைப் பணியமர்த்தி; 21 ஆண்டுகால செயல்பாட்டு நிபுணத்துவம் கொண்டு 12 மில்லியன் சதுர அடி ரியல் எஸ்டேட் கட்டமைப்பை செயல்படுத்தியுள்ள ANSR மற்றும் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்கள் வேகமாக வளரும் உலகளாவிய நிறுவனங்களுக்கான திறன் மையங்களை உருவாக்குதிலும் விரிவாக்குவதிலும் முன்னணியில் உள்ளன. அவர்களின் நிபுணத்துவம் செயற்கை நுண்ணறிவு பொறியியல், இணையப் பாதுகாப்பு, தயாரிப்பு மேம்பாடு, டிஜிட்டல் வர்த்தகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), தரவு அறிவியல் மற்றும் நிறுவன செயல்பாடுகள் (Enterprise operations) ஆகியவற்றில் பரவியுள்ளது.
தொழில், முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இந்த ஒப்பந்தம் குறித்து கூறும்போது:-
"இந்தக் கூட்டாண்மை மூலம், ANSR அடுத்தகட்ட உலகளாவிய நிறுவனங்களைக் கொண்டு வர உதவும். கொள்கை வசதிகள், விரைவான ஒப்புதல்கள், இடத் தேர்வு மற்றும் வலுவான திறமை இணைப்புகள் ஆகியவற்றில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம்.
உலககளாவிய திறன் மேம்பாட்டு மையத்திற்கு உலகிலேயே மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், BFSI (வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் காப்பீடு), பொறியியல், விண்வெளி மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளதைக் காண்கிறீர்கள். அவர்கள் எங்களின் திறமை, எங்களின் உள்கட்டமைப்பு மற்றும் இந்த அரசின் ஸ்திரத்தன்மையின் காரணமாக தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ANSR நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி லலித் அஹுஜா அவர்கள் இந்த ஒப்பந்தம் குறித்து கூறும்போது : "வலுவான திறமை, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, முற்போக்கான நிர்வாகம் மற்றும் செழிப்பான புத்தாக்கச் சூழல் ஆகியவற்றுடன், உலகிலேயே மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த GCC இலக்கு மாநிலமாக மாறத் தேவையான அனைத்து அம்சங்களையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. அடுத்த தலைமுறை உலகளாவிய நிறுவனங்களை மாநிலத்திற்குக் கொண்டு வர அரசாங்கத்துடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், BFSI, பொறியியல், விண்வெளி மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளில் உள்ள முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் GCC-களுக்கு தமிழ்நாடு ஏற்கனவே தாயகமாக உள்ளது. மாநிலத்தின் அர்ப்பணிப்புள்ள GCC கொள்கை, நிகரற்ற வேலைவாய்ப்புத் தகுதி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பணியாளர்களுடன், ANSR உடனான இந்த ஒத்துழைப்பு வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க முதலீடுகள், மேம்பட்ட புத்தாக்கத் திறன்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள GCC வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாட்டின் GCC-களுக்கான முதன்மையான உலகளாவிய இடமாக மாறும் பயணத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும், புதுமை, போட்டித்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஆதரிக்கும் எதிர்காலத்திற்குத் தயாரான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான அதன் உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துகிறது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!
-
”மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது” : மீண்டும் வலியுறுத்திய உச்சநீதிமன்றம்!