Tamilnadu

இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு.. ஆரஞ்சு அலர்ட் முதல் கனமழை வரை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் வடகிழக்கு, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல். 

தென்இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (15-11-2025) காலை 0830 மணி அளவில், இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக  தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழைப் பொழிவு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் குறித்த விவரம் வருமாறு :-

=> 16-11-2025

கனமழை முதல் மிக கனமழை - கடலூர். மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை - தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

=> 17-11-2025

கனமழை முதல் மிக கனமழை - காஞ்சிபுரம், விழுப்புரம். செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை - சென்னை, திருவள்ளூர், கடலூர். மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

=> 18-11-2025

கனமழை -  சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

=> 19-11-2025

கனமழை - கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், தமிழ் நாடு அரசு  உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று  மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும், இடைஇடையே மணிக்கு 55 கிமீ வேகம் வரை  காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்  என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட கடல்  பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ளதால், மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Also Read: சிவகங்கை மாவட்டம் : 8,301 பயனாளிகளுக்கு ரூ.88.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்!