Tamilnadu
தமிழ்நாட்டில் புதிதாக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.11.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் செலவில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் கட்டுதல், பாதுகாப்பு பணிகளுக்காக வாகனங்களை கொள்முதல் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், 2025-2026ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் 12 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டு, அவ்வாகனங்களின் பயன்பாட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள், தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிக்கவனம் செலுத்த ஈடுபடுத்தப்படும்.
Also Read
-
‘எதிர்த்து போராடினால் இதுதான் கதி’ என மிரட்டுகிறதா த.வெ.க அரசு? : கீதா ஜீவன் கேள்வி!
-
“தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது செவிலியர்களை ஏமாற்றியுள்ளது த.வெ.க அரசு!” : கனிமொழி!
-
தமிழ்நாட்டில் த.வெ.க வந்திருப்பதற்கு SIR-தான் காரணம்! : வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி!
-
தாராபுரத்தில் தவெக-வின் தில்லுமுல்லு?.. மூதாட்டியை விசில் சின்னத்தில் ஓட்டுப்போடச் சொன்ன அலுவலர்!
-
அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிய வேண்டும் : உயர் நீதிமன்றத்தில் மனு!