Tamilnadu
🔴LIVE | கரூர் துயரம் - பேரவையில் காரசார விவாதம்... பழனிசாமியை கேள்விகளால் துளைத்தெடுத்த அமைச்சர்கள்!
பழனிசாமியின் உள்நோக்கம் என்ன ?
கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் தெரிந்த பிறகும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. அந்தக் கட்சியின் தலைவரும் உடனடியாக விமான நிலையம் புறப்பட்டுவிட்டார். அதைப்பற்றியெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஒருமுறை கூட கேள்வி கேட்கவில்லையே ஏன் ? அதில் என்ன உள்நோக்கம் உள்ளது ?
- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி!
அதிமுகவினர் திருந்த வேண்டும்!
கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம். ஆனால் அதனை செய்ய திராணி இல்லாமல் வெளியே சென்றிருக்கிறார்கள். அதிமுகவினர் திருந்த வேண்டும்.
- சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் காட்டம்.
அதற்கு பதில் கூறினாரா பழனிசாமி ?
கரூர் சம்பவத்திற்கு முதலமைச்சர் பதில் கூற வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் பட்டப்பகலிலே வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு தூத்துக்குடியில் போராடியவர்கள் நெஞ்சில் சுட்டார்களே, அதற்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறினாரா?
- சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பதிலடி.
மரணத்தில் அரசியல் செய்ய நினைக்கிறார்கள்!
சில அரசியல் கட்சிகள் மரணத்தில் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். தற்போது ஒரு துரும்பு கிடைத்தால் கூட தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்.
- சட்டப்பேரவையில் காங்கிரஸ் MLA செல்வப்பெருந்தகை பேச்சு!
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிடும்!
உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி கூட இல்லாதது வருத்தம் அளிக்கிறது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிடும்!
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
விரக்தியில் பேசுகிறார் பழனிசாமி!
“சட்டமன்றத்திற்குள் ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு சபைக்கு வந்திருக்கிறார்கள் அதிமுகவினர். அவர்கள் கட்சியை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டால் கூட இப்படிப்பட்ட குரல் வந்திருக்குமா என தெரியவில்லை. கூட்டணி சரியாக அமையவில்லை என்ற விரக்தியில் இதுபோல நடந்துக்கொள்கிறார்கள்!”
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்!
கூட்டணிக்கு ஆள்கிறார் பழனிசாமி!
“எதிர்க்கட்சித் தலைவர் நியாயமான கேள்விகள் கேட்டால் அதற்குரிய பதில் கிடைக்கும். நீங்கள் கூட்டணிக்கு ஆள் சேர்த்து வருகிறீர்கள். அதனால்தான் இப்படி பேசி வருகிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்!”
- எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.
குஜராத் விமான விபத்திலும் 12 மணி நேரத்தில் உடற்கூராய்வு !
கரூர் துயரச் சம்பவத்தில் 14 மணி நேரம் உடற்கூராய்வு நடந்தது. இதற்கான வீடியோ பதிவும் இருக்கிறது. இதில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லை. முதலமைச்சர் மனித நேயத்தோடு இந்த செயலை செய்துள்ளார். குஜராத் விமான விபத்தின் போதும் 12 மணி நேரத்தில் உடற்கூராய்வு நடந்து முடிந்தது.
- சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.
பழனிசாமிக்கு அது பலன் தராது!
“என்னதான் அதிமுகவினர் மெகா கூட்டணி, மகா கூட்டணி என்று சொல்லிக் கொண்டு இருந்தாலும் மக்கள் சரியான தீர்ப்பளிப்பார்கள். எந்த கூட்டணி அமைத்தாலும் பழனிசாமிக்கு அது பலன் தராது!”
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
கூட்டணிக்கு அலைகிறார் பழனிசாமி!
“எதிர்க்கட்சித் தலைவர் நியாயமான கேள்விகள் கேட்டால் அதற்குரிய பதில் கிடைக்கும். நீங்கள் கூட்டணிக்கு ஆள் சேர்த்து வருகிறீர்கள். அதனால்தான் கரூர் துயர சம்பவத்தை அரசியலாக்கி, இப்படி பேசி வருகிறீர்கள் என்பது மக்களுக்குத் தெரியும்!”
- எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.
கள்ளக்குறிச்சி போன்றது அல்ல கரூர் சம்பவம்!
“கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அமைச்சர்கள் அனைவரும் அங்கு சென்றார்கள். ஆனால் கரூர் சம்பவம் அதுபோன்றது அல்ல. அப்பாவி மக்கள் மிதிபட்டு, இறந்துள்ளார்கள். அதனால்தான் நான் நேரில் சென்று பார்த்தேன்!”
- எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி.
அதனால்தான் அன்றைய இரவில் உடற்கூராய்வு !
“கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில், இறந்த அனைத்து உடல்களையும், குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால், அன்றைய இரவில் உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு அனுமதி பெற்று, 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது.”
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன!
“கரூர் துயரச் சம்பவத்தை தமிழ்நாடு அரசு சட்டப்படி, விரைந்து கையாண்டது. அனுமதி வழங்கல், மருத்துவ உதவி, நிவாரண விநியோகம் அனைத்தும் சரியான நடைமுறையில் நடந்தன. இதுபோன்ற துயரங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.”
- கரூர் துயரச் சம்பவம் குறித்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பழனிசாமி திரித்து கூறுவது சரியல்ல!
கரூர் துயரச் சம்பவம் யாரும் எதிர்பாராத துன்பமான நிகழ்வு. இதுபோன்ற அசம்பாவித சம்பவம் ஏதேனும் நிகழ்ந்தால், அதனை சட்டமன்றம் கூடுகையில் தெரிவிக்க வேண்டும். இதுதான் நடைமுறை. அந்தவகையில் தான் விளக்கம் அளிக்கப்பட்டதே தவிர, எதிர்க்கட்சி தலைவர் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி திரித்து கூறுவது சரியல்ல!
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
தவெக கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணம்!
“தவெக-வுக்கு கூடிய கூட்டத்தைவிட அதிகளவு கூட்டம் அந்த பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு கூடியது. பச்சை பஸ்ஸில் இருந்து கொண்டு தொண்டர்களை பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்துகிறார் பழனிசாமி. இதனால் எந்த பிரச்சினையும் நிகழவில்லை, ஆனால் நடிகர் விஜய் கேரவானுக்குள் அமர்ந்து கொண்டு யாரையும் பார்க்காமல் சென்றதாலே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.”
- சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.
பாதிக்கப்படுவது தொண்டர்கள் தான்!
எனது ஐம்பது ஆண்டு காலப் பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும் உட்பட்டுதான் நடத்தி வருகிறார்கள். கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது தொண்டர்கள் தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும்.
- கரூர் துயரச் சம்பவத்தை குறிப்பிட்டு, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம்!
“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரையும் காத்தது கழக அரசு. இது போன்ற துயர சம்பவம் இனி நடக்கக்கூடாது என்ற உறுதியை அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது அமைப்புகளும் எடுக்க வேண்டும். அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம். மக்களின் உயிரே விலைமதிப்பற்றது. இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்!”
- கரூர் துயரச் சம்பவம் குறித்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பாதிக்கப்படுவது தொண்டர்கள் தான்!
எனது ஐம்பது ஆண்டு காலப் பொதுவாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன். பார்த்திருக்கிறேன். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை நடத்துபவர்கள் அதற்குரிய சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும் உட்பட்டுதான் நடந்து வருகின்றன. கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது தொண்டர்கள் தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும்.
- கரூர் துயரச் சம்பவத்தை குறிப்பிட்டு, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை!
“கரூர் துயரச் சம்பவத்தை கேள்விப்பட்டதும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. அன்று இரவே நானும் கரூருக்குச்சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டன. அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று பணியாற்றினார்கள்.”
- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
விஜய் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்!
“தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தவெக கூட்டத்தில் மக்களுக்கு குடிநீர் தரப்படவில்லை, உணவு வழங்கப்படவில்லை, இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கியமான ஏற்பாடுகளைச் செய்யவில்லை”
- சட்டப்பேரவையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
காவலர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது!
கரூர் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசின் காவல் துறையின் சார்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
காவல்துறையைப் பொறுத்தவரை, வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது.
- சட்டப்பேரவையில், கரூர் துயர சம்பவத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (அக்.14) தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தொடரில் முன்னாள் உறுப்பினர்கள், கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று (அக்.15) 2-வது நாள் அமர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்தனர். இதைத்தொடர்ந்து கரூர் துயரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து வருகிறார்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!