Tamilnadu
கல்வியை பறிக்க நினைப்பவர்கள் மத்தியில் கல்வியை கொடுக்கும் தமிழ்நாடு அரசு : இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு!
’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்ட விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும், சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாக நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது.
தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருங்கமான திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், விளையாட்டுச் சாதனையாளர்கள், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் மற்றும் அரசுப் பள்ளிகளிலிருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற சாதனையாளர்கள் ஆகிய பகுதிகளாக இவ்விழா நடைபெற்றது.
இதன் ஒவ்வொரு பகுதியிலும் அரசின் திட்டம் மூலம் பயனடைந்த மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், புதுமைப் பெண் திட்டத்தால் பயனடைந்த மாணவர்களின் குரல்களை கேட்டபோது அரங்கமே கண்ணீரில் நெகிழ்ந்தது.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ”கல்வி நம் அனைவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ்நாடு எப்போதும் கல்விக்கு முக்கியத்தும் கொடுக்கும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும், சாப்பாட்டுக்கே வழியில்லை என்றாலும் பிள்ளைகளை படிக்க வைக்கும் அப்பா, அம்மா தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 50 ஆண்டுகளாக இதே பாரம்பரியம் தொடர்கிறது.
கல்வியை நம்மிடம் இருந்து பறிக்கும் வேலை ஒருபுறம் நடந்தாலும்; மறுபுறம் அதனை அனைவருக்கும் அளிக்கும் பணியை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. குறிப்பாக, உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்வியில் பெரும் பாய்ச்சலை நாம் ஏற்படுத்தி இருக்கிறோம். இது சாதாரண விசயம் அல்ல” என தெரிவித்துள்ளார்.
அதேபோல் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, பேசுகையில்,”முதலாளிகளின் கோரிக்கையை பூர்த்தி செய்கிற நிறைய அரசுகள் மத்தியில் பாமர மக்களின் குழந்தைகளின் கோரிக்கைகளுக்காக திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருப்பது மிகவும் உணர்வுபூர்மானது. முதலமைச்சர் எப்போதும் சொல்வதுபோல் 'எல்லோரும் படியுங்கள்... படித்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும்” என கூறினார்.
மேலும் இவ்விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசும்போது,”நாங்கள் அரசு பள்ளியில் படிக்கும் போது எந்த உதவியும் கிடைக்காது. ஆனால் இன்று அப்படி இல்லை. உங்களுக்கு எல்லா உதவியும், நல்ல திட்டமும் கிடைக்கிறது. உங்களை பார்த்துக் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகிய மூன்று பேர் இருக்கிறார்கள். உங்களுக்கு வாழ்க்கையில் இனி எந்த முட்டுக்கடையும் கிடையாது. நீங்கள் படித்தால் மட்டும்போதும்” என தெரிவித்தார்.
Also Read
-
“தமிழ்நாட்டின் கல்வி குறித்து போலி தரவுகள்” : ASER நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்திய எழுத்தாளர் !
-
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது எப்போது ? - தமிழ்நாடு அரசு அறிவிப்பு... விவரம் உள்ளே !
-
“கல்வித்துறையில் நிகழ்த்தப்பட்ட வெற்றிகரமான முன்னெடுப்பு” : பாலசுப்பிரமணியன் முத்துசாமி பாராட்டு!
-
கல்வியில் சிறந்த தமிழ்நாடு - “எலைட் மக்களுக்கு இது கிரிஞ்சாகத்தான் தெரியும்” : இயக்குநர் கவிதாபாரதி !
-
ஆகம விதியை பின்பற்றும், பின்பற்றாத கோவில்கள் என்ன ? - 6 பேர் கொண்ட குழுவை அமைத்த உச்சநீதிமன்றம் !