Tamilnadu

”தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவையே காக்கும் ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : கோவி.லெனின் பேச்சு!

கோவை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் "ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தின் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் துடியலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று மாநில தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் கோவி.லெனின் பேசியது வருமாறு:-

தமிழ்நாட்டிற்கு இரண்டு பேர் தொடர்ந்து துரோகங்களை செய்து வருகிறார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல ஒன்று பிரதமர் நரேந்திர மோடி. மற்றொருவர் அமித்ஷா. ஒன்றிய பா.ஜ.க ஆட்சியால் தமிழ்நாட்டிற்கு கிடைத்தது என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தினந்தோறும் மக்களுக்கான திட்டங்களை செயல்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு என்ன செய்கிறது?. நமக்கான நிதியை கூட தராமல் வஞ்சித்து வருகிறது.

மதத்தை வைத்து அரசியல் செய்கிறது பா.ஜ.க. ஆனால் நாம் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் இணைந்து ஓரணியில் தமிழ்நாட்டை இணைத்து வருகிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்த மாநிலத்தையும், மொழியையும் காக்கும் அரசு என்றால், அதுநமது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசுதான்.

ஒற்றை மனிதராக ஜனநாயகத்தை காக்கும் மனிதராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும் தலைவராக நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தை எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது. நமக்கு மட்டும் தலைவர் அல்ல அவர், இந்திய நாட்டின் ஜனநாயகத்திற்கே தலைவராக திகழ்ந்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Also Read: ”பழனிசாமியால் அமித்ஷா இசம் ஆகிவிட்டது அதிமுக” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!