Tamilnadu

யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக வார விடுமுறைகளில் இவரது பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கக் கோரி விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்றம், உயரமான இடங்களில் ஏறி நின்று ஏதாவது அசம்பாவிதம்

நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது?. கூட்டத்தை நீங்கள் ஒழுங்குபடுத்த வேண்டாமா?. போக்குவரத்து முடங்கினால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?. சேதப்படுத்தப்பட்ட பொதுசொத்துகளுக்கு இழப்பீடு வசூலிப்பதில் தலையிட நேரிடும். யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல. பொதுக்கூட்டம் நடத்தினாலும் சட்டத்திற்கு உட்பட்டுதான் நடத்த வேண்டும்” என அடுக்கடுக்காக கேள்விளை எழுப்பியுள்ளது.

Also Read: முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!