Tamilnadu
தி.மு.க முப்பெரும் விழா தொடங்கியது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் இம்மூன்றையும் இணைத்து தி.மு.க. முப்பெரும் விழாவாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் பெருவிழாவாக நடத்தி வந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது அடியொற்றி கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. முப்பெரும் விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
அந்தவகையில் திராவிட இயக்க வரலாற்றில் – தி.மு.க. வரலாற்றில் முப்பெரும் விழா தனிச்சிறப்புப் பெற்றதாகும். இம்முப்பெரும் விழாவையொட்டி வழங்கப்படும் விருதுகள் ஒவ்வொரு கழகத்தினருக்கும் தனது உழைப்புக்கு கிடைத்த விருதாகவே பெருமைகொள்வர்.அந்த வகையில் தி.மு.க. முப்பெரும் விழா 17.09.2025 அன்று கரூர் மாநகரில் நடைபெறும் என்று தலைமைக் கழகம் சார்பில் கழகத் தலைவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
இதன்படி இன்று கரூரில் முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கரூர மாவட்ட செயலாளர் வி.செந்தில் பாலாஜி வரவேற்புரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில், பெரியார் விருது கனிமொழி எம்.பிக்கும், அண்ணா விருது சுப.சீத்தாராமன் அவர்களுக்கும், கலைஞர் விருது சோ.மா.இராமச்சந்திரன் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது குளித்தலை சிவராமன் அவர்களுக்கும், பேராசிரியர் விருது மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கும், மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றினார்.
Also Read
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2026-ல் திமுகவின் வெற்றிக் கணக்கு இங்கிருந்து தொடங்குவோம் : முப்பெரும் விழா - செந்தில்பாலாஜி வரவேற்புரை!
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!