Tamilnadu
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (17.09.2025) 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தங்களின் குறைகளை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நாளை சென்னையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் :
திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-6ல் பி.கெனால் சாலையில் உள்ள காளி கோயில் திறந்தவெளி இடம்,
மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-33ல் பாரதியார் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கர் மண்டபம்,
தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-46ல் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், சி-கல்யாணபுரத்தில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி,
இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-56 பவளக்கார தெருவில் உள்ள ஜெயின் விலாஸ்,
திரு. வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-73ல் பட்டாளம், ஸ்டாரஹன்ஸ் சாலையில் உள்ள மண்டலம் 6 அலுவலகம்,
அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-79ல் வெங்கடாபுரம், ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள அருள் ஜோதி திருமண மண்டபம்,
தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-125ல், மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி,
கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-134ல் மேற்கு மாம்பலம், பக்தவச்சலம் தெருவில் உள்ள விளையாட்டு மைதானம்,
வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்–11) வார்டு-144ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள ஶ்ரீபாக்கியலட்சுமி திருமண மண்டபம்,
ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்–12) வார்டு-161ல் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ் நிதி மேல்நிலைப் பள்ளி,
அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-172 கிண்டி, ரேஸ் கோர்ஸ் உட்புற சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தங்கும் விடுதி மைதானம்,
பெருங்குடி மண்டலம் (மண்டலம்–14) வார்டு-186ல் உள்ளகரம், புழுதிவாக்கம் பிரதான சாலையில் உள்ள ஶ்ரீ சுமங்கலி திருமண மண்டபம் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!