Tamilnadu

மன்னிப்பு கேட்க வேண்டும் : சீமானுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயலட்சுமி தரப்பில் ஆஜரான வாக்கறிஞர், கடந்த முறை உச்ச நீதிமன்றம் சமரச பேச்சு நடத்த உத்தரவிட்டது. ஆனால், அன்று மாலையே சமரசத்துக்கு தயாராக இல்லை என்று சீமான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தன் மீது அவதூறாக மிகவும் மோசமான அருவருப்பான முறையில் பேசி வருகிறார். அரசியல் கட்சியில் அவர் இருப்பதால் தனக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரிவில் வசித்து வருகிறேன். தன்னை திருமணம் செய்வதாக கூறி வாழ்க்கை நடத்தினார். 2007 முதல் 2011 வரை ஒன்றாக வாழ்ந்தோம். தாலி மட்டும் கட்டவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதாக விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதயடுத்து விஜயலட்சுமி குறித்து அவதூறாக பேசியதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நீங்கள் ஒன்றும் அசாதாரணமான மனிதர் அல்ல என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் விஜயலட்சுமி குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த பிரச்னையில் விஜயலட்சுமியுடன் சுமுகமாக செல்வதற்கான மனுவில் தெரிவிக்க வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இல்லாவிட்டால் புகார் ரத்துசெய்யப்பட மாட்டாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

செப்.24 ஆம் தேதிக்குள் மன்னிப்பு கோரி உரிய பதிலை தாக்கல் செய்யாவிட்டால் கைதுக்கான தடை அதன் பிறகு நீட்டிக்கப்படாது என்று கூறி வழக்கை உச்ச நீதிமன்றம் செப்.24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Also Read: பள்ளி வழியை மறித்து எடப்பாடி பழனிசாமிக்கு கட் அவுட் : அதிமுகவினர் அராஜகம்!