Tamilnadu
பா.ம.கவில் இருந்து அன்புமணி நீக்கம் : ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இருந்து வந்த உரசல்போக்கு புத்தாண்டு அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. மேடையிலேயே இருவரும் எதிர்த்து பேசிக் கொண்டது அக்கட்சி தொண்டர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை அதிரடியாக நீக்கினார் ராமதாஸ். பின்னர் ராமதாஸ் தலைமையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தையும் அன்புமணி புறக்கணித்து வந்தார்.
பின்னர், "அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியதே தவறு. பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி நடந்து கொண்டது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேடை நாகரீகமும், சபை நாகரீகமும் இல்லாமல் செயல்பட்டது யார்?.
அழகான ஆளுயர கண்டாடியான கட்சியை ஒரு நொடியில் உடைத்தது யார்?. கட்சியில் அன்புமணி கலக்கத்தை ஏற்படுத்தி விட்டார்" என செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் கூறினார்.
இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அதற்கு பதில் அளிக்கும் படி, ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, செப்.10 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லை என்றால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ராமதாஸ் விடுத்த கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பா.ம.க செயல்தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மேலும் ”அரசியல் தலைவராக செயல்பட தகுதியற்றவர் அன்புமணி. தான்தோன்றித்தனமாக செயல்படும் அன்புமணியுடன் கட்சியினர் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.” என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
-
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!