Tamilnadu

சென்னை நுங்கம்பாக்கத்தில் ‘ஜெய்சங்கர்’ பெயரில் சாலை! : தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரை ‘ஜெய்சங்கர் சாலை’ என்று பெயர் மாற்ற செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்தவர் மறைந்த பிரபல நடிகர் ஜெய்சங்கர். தமிழ் சினிமாவின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் 2000ஆம் ஆண்டு மறைந்தார்.

இந்நிலையில் ஜெய்சங்கர் வீடு இருந்த கல்லூரி பாதைக்கு அவர் பெயர் சூட்ட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார் ஜெய்சங்கர் மகன் விஜயசங்கர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மண்டலம் 09, கோட்டம் 111, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள கல்லூரி பாதையின் (College lane) பெயரையே, ‘ஜெய்சங்கர் சாலை’ என்று மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் கல்லூரி பாதையின் (College lane) பெயர் ‘ஜெய்சங்கர் சாலை’ என்று மாற்றம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Also Read: கல்வித்தகுதியை பொது வெளியில் சொல்ல பிரதமர் மோடிக்கு என்ன தயக்கம்? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!