Tamilnadu
"ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தினால் 3 முதல் 10 ஆண்டு வரை சிறை" - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை !
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாலையில் பொதுக்கூட்டம் போல பொதுமக்களிடம் பேசினார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்து கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, "அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார்" என மிரட்டல் விடுத்துள்ளார்.
பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து என்றால் முதலில் விரைந்து வரும் ஆம்புலன்சுக்கு வழிவிடாமல், ஓட்டுநரை மிரட்டியுள்ளது பழனிசாமியின் உண்மையான சுயரூபத்தை காட்டியுள்ளது என பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று திருச்சி மாவட்டம் துரையூர் பகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள இருந்தார். இந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்த நிலையில், அதை மறித்த அதிமுகவினர் ஓட்டுநரை தாக்க முயன்றுள்ளனர். ஆம்புலன்ஸ் டிரைவர், நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை எடுத்து கூறினார். ஆனால், அங்கு இருந்த அதிமுகவினர் அதை கேட்காமல் அவரை தாக்க முயன்றுள்ளனர்.
இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீதும் ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல் நடத்தினால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீதும் ஆம்புலன்ஸ் மீதும் ஒரு நபர் தனியாகவோ, கூட்டமாகவோ மற்றும் எந்த ஒரு அமைப்பின் மூலமாகவோ அரசு அவசர கால ஊர்தியின் மீதோ அல்லது பணியாளர்கள் மீதும் வன்முறையில் ஈடுபட்டால் ஜாமினில் வெளிவர இயலாத பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படுவதோடு சொத்துக்கு ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையும் நீதிமன்றத்தின் மூலமாக அபராதத்துடன் செலுத்த நேரிடும்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!