Tamilnadu

"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் காணொளி வாயிலாக நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் வடகிழக்கு பருவழை முன்னைற்பாட்டுப் பணிகள் மற்றும் நிரந்தர வெள்ளத்தடுப்புப் பணிகளின் முன்னைற்றம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து 2025-26 ஆண்டின் அறிவிப்பு பணிகளில் ரூ.1321.52 கோடி மதிப்பில் 254 பணிகள் அரசாணை வழங்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.338.00 கோடி மதிப்பில் அரசாணை வழங்கப்பட்ட 12 வெள்ளத் தணிப்புப் பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடிக்குமாறும், வடகிழக்கு பருவ மழை முன்னதாகவே சென்னை சுற்றியுள்ள பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட அனைத்து நீர் வளத்திலும் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120.13 அடியில் உள்ளது என்றும், இச்சூழலில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதோடு . இந்த ஆண்டில் ஜீன் மாதம் முதல் இது வரை 5-வது முறையாக இன்று மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை (120 அடி) எட்டியதுள்ளது என்றும், முதலமைச்சர் ஆட்சியில் மிக பெரிய வரலாறு, இந்த வரலாறு எங்களுடைய ஆட்சியில் நடப்பது நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Also Read: "ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !