Tamilnadu
செய்தியாளர்களிடம் அடாவடியாக நடந்து கொண்ட சீமான் : பொதுக்கூட்டத்தில் நடந்த பரபரப்பு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசிக் கொண்டு இருந்தார். இதற்கிடையில், இந்நிகழ்ச்சியை செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் வந்துள்ளனர். அப்போது அங்குருந்த பாதுகாவலர்கள் அவர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் 'எங்களை அனுமதிக்க வேண்டும்' என செய்தியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் விடாப்பிடியாக இருந்தனர். இதனால் செய்தியாளர்களுக்கும், அங்கு இருந்த பாதுகாவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது மேடையில் பேசிக் கொண்டு இருந்த சீமான் திடீரென ஆவேசமாக கீழே இறங்கி வந்து செய்தியாளர்களிடம் வாக்குவாதம் செய்ய முயற்சித்தார். இதனால் இந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக கட்சி அளித்தது.
பின்னர் அங்கிருந்து சீமானை கட்சி தொண்டர்கள் அழைத்து சென்றனர். பொதுக்கூட்ட மேடையில் ஆவேசத்துடன் செய்தியாளர்களை தாக்குவது போல் வந்த சீமானின் நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டு திட்டம்! : முழு முனைப்பில் தமிழ்நாடு அரசு!
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ போட்டிகள்! : மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
-
திராவிட மாடல் அரசின் புரட்சிகரமான திட்டங்கள்... மற்ற மாநிலங்களுக்கு சிறந்த உதாரணமாகத் திகழும் தமிழ்நாடு!
-
‘எதிர்க்கட்சித் தலைவர்போல’ செயல்படும் ஓர் ஆளுநர்? : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
40 ஆண்டுகால கோரிக்கை.. இராயபுரத்தில் புதிய இரயில்வே சுரங்க பாதை... திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!