Tamilnadu

M.Ed மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்... அமைச்சர் அறிவிப்பு - முழு விவரம் உள்ளே !

2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில்

மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (11.08.2025) முதல் இணையவழியில் தொடங்கும். மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2025 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பின்னர், இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2025 அன்று வெளியிடப்படும்.

மாணாக்கர் சேர்க்கை 26.08.2025 முதல் 29.08.2025 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று முதல் துவங்கும்"என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: “திராவிட மாடல் 2.Oல் இதுவரை அடையாத புதிய உச்சத்தை தமிழ்நாடு அடையும்!” : திருப்பூரில் முதலமைச்சர் பேருரை!