Tamilnadu
”மக்களின் தீர்ப்பு திருட படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” : CM மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
பா.ஜ.க-வுக்கு சாதகமாக இந்தியர்களின் வாக்குகளை திருடி தேர்தல் ஆணையம் முறைகேடு செய்வதாக காங்கிரஸ் முன்னணித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வாக்கு திருட்டு குறித்து சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,” தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளது. கர்நாடகா மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் நடந்தது நிர்வாகக் குறைபாடு அல்ல, மக்களின் தீர்ப்பைத் திருட திட்டமிட்ட சதி.
வாக்குகள் திருடப்படுவது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ஆதாரங்கள், தேர்தல் ஆணையத்தின் மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் மின்னனு வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.
அரசியல் ரீதியாக இயக்கப்படும் நீக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நமது ஜனநாயகத்தின் இந்த நாசவேலை குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்.
வாக்குகள் திருட்டு குறித்து இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு திமுக தோளோடு தோள் நிற்கிறது. பா.ஜ.க பட்டப்பகலில் இந்தியாவின் ஜனநாயகத்தைக் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தேசிய மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு : பிரதமர் மோடிக்கு முக்கிய ஆலோசனை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
“தணிக்கை வாரியத்தை கூட்டணியில் சேர்த்து கொண்ட பா.ஜ.க” : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
‘பராசக்தி’ திரைப்படம் - பேரறிஞர் அண்ணா வசனம் நீக்கம் : வாய் திறக்காத அ.தி.மு.க.!
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!