Tamilnadu
போலி மருந்துகள் தயாரிக்கிறதா இந்தியா? : நாடாளுமன்றத்தில் ஈஸ்வரசாமி MP சரமாரி கேள்வி!
பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளின் செலவைக் குறைக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர் அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள், நோயறிதல் மற்றும் ஐசியூ சேவைகளின் விலையை ஒழுங்குபடுத்துவதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
உயர் சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளை சார்ந்திராமல் அரசு பொது மருத்துவமனைகளை மக்கள் பயன்படுத்த நடவடிக்கைகள் என்ன?. ஆயுஷ்மான் பாரத் மற்றும் மாநில சுகாதார காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் அதிக அளவில் பயன்பெற நடவடிக்கைகள் என்ன ?
நாடு முழுவதும் நோயாளிகளின் செலவுகளைக் குறைக்க பொது மருந்துகள், உள்ளூர் கொள்முதல் மற்றும் இணையவழி மருத்துவம் ஆகியவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்க அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? எனும் பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.
பழச்சாறு என ஏமாற்றப்படும் செயற்கை சுவையூட்டப்பட்ட பானங்களால் பாதிப்பு தடுக்க தவறிய ஒன்றிய அரசு!
குளிர்பான நிறுவனங்கள் குறைந்த கூழ்(pulp) கொண்ட பழ பானங்களை "100% பழச்சாறு" என்று தவறாக விளம்பரப்படுத்துவதையோ அல்லது மக்களை ஏமாற்றும் காட்சிகளைப் பயன்படுத்துவதையோ தடுக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) கடுமையான லேபிளிங் விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என வேலூர் திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
2023 முதல் பதிவான விதிமுறை மீறல்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக விதிக்கப்பட்ட அபராதங்கள் எவ்வளவு? என்று கேட்டுள்ள அவர், லேபிள்களின் முன்பக்கத்தில் உண்மையான உள்ளடக்க சதவீதத்தை குறிப்பிட அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
உண்மையான பழச்சாறுக்கும் செயற்கை சுவையூட்டப்பட்ட பானங்களுக்கும் உள்ள வேறுபாடு குறித்து நுகர்வோருக்கு, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
போலி மருந்துகள் தயாரிக்கிறதா இந்தியா?
உலக சுகாதார அமைப்பின்(WHO) ஆய்வில் இந்தியா தரமற்ற மற்றும் போலியான மருந்துகளை உற்பத்தி செய்து வழங்கும் நாடு என குற்றம்சாட்டியிருப்பதை குறிப்பிட்டு பொள்ளாச்சி திமுக மக்களவை உறுப்பினர் ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆய்வின் முடிவு குறித்து அரசாங்கம் ஏதேனும் தீவிர நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருந்தால் அதன் விவரங்கள் கேட்டுள்ளார்.
Also Read
-
334 அரசியல் கட்சிகள் நீக்கம்... தேர்தல் ஆணையம் அதிரடி : தமிழ்நாட்டில் எத்தனை கட்சிகள்? விவரம் உள்ளே !
-
"நிலம் எனும் அதிகாரம் பெற்றவர்களாக நம் மக்கள் இருக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட மாநில கல்விக்கொள்கை - கமல்ஹாசன் பாராட்டு !
-
”எடப்பாடி பழனிசாமியின் வயிற்றெரிச்சலுக்கு இதுதான் காரணம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
4 ஆண்டுகள் - 17 லட்சம் பேருக்கு பட்டா : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!