Tamilnadu
சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.... ஏராளமான பொதுமக்கள் வரவேற்பு !
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடந்த வாரம் வழக்கமான நடைப்பயிற்சியில் போது தலை சுற்றல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு இருந்தபடி அதிகாரிகளை அழைத்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கலகத்தினரையும் அழைத்து ஓரணியில் தமிழ்நாடு குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். அதோடு மருத்துவமனையில் இருந்தபடியே அலுவல் பணிகளையும் மேற்கொண்டார்.
இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முதலமைச்சர் இன்று வீடு திரும்புவார் என அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில், "அப்பல்லோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் சாலை) மருத்துவர் செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதலமைச்சர் அவர்கள் இன்று மாலை இல்லம் திரும்ப உள்ளார்கள்.
முதலமைச்சர் அவர்கள் நலமாக இருக்கின்றார்கள். மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்"என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை முதலமைச்சர் சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினார். வீடு திரும்பிய முதலமைச்சரை மருத்துவமனைக்கு வெளியே ஏராளமான பொதுமக்கள், கழகத்தினர் திரண்டு வரவேற்றனர்.
Also Read
-
தூத்துக்குடி விமான நிலையம்... நிலத்தை கையகப்படுத்தி கொடுத்த தமிழ்நாடு அரசு... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா !
-
மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு... உபரி நீரை சேமிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் உத்தரவு !
-
“மருத்துமனையிலும் மக்கள் பணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
-
“இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!” : திராவிட மாடல் ஆட்சியை புகழ்ந்த தமிழ்நாடு அரசு!
-
“மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!” : தமிழ்நாடு வளர்ச்சி குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மனு!