Tamilnadu

நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !

நிதி நிறுவனங்கள் நடத்தி பல்லாயிரக்கணக்கான ரூபாய் மோசடிகளில் பல்வேறு நிதி நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. தமிழ்நாடு அரசு அந்த நிறுவனங்களிடமிருந்து சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் மதுரையை தலைமை இடமாகக் கொண்ட நியூ மேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாய் மோசடியினை செய்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், நிதி நிறுவன மோசடிகளில் ஈடுபட்டுபவர்களுக்கு குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், நிதி நிறுவன மோசடி புகார்களில் விரைந்து முடிக்க தனி அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணை தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ளது நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து நிதி நிறுவன மோசடிகளில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்தது. பல ஆண்டுகளாக நிதி நிறுவன மோசடிகளின் சிக்கி காத்திருக்க கூடியவர்களுக்கு அரசின் முன்னெடுப்புகளால் விரைவில் மீள வாய்ப்பு என்றும் நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்தது. இதற்கு உறுதுணையாக இருந்த அரசு வழக்கறிஞர்களுக்கும் நீதிபதி அவர்கள் தங்களது பாராட்டினை தெரிவித்தார்.

Also Read: ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!