Tamilnadu

முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கும் வகையில் 'நான் முதல்வன் திட்டத்தை கொண்டுவந்தார். இந்த திட்டத்தின்கீழ் 'பயின்ற ஏராளமான மாணவர்கள் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த விஜய்காந்த் (வயது 27) என்ற மாணவர் இஸ்ரோ (ஐஐஆர் எஸ் - டேராடூன்) ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் செயற்கைக்கோள் பகுப்பாய்வு மற்றும் புகைப்பட வரைபடவியல் திட்டத்திற்கு தேர்வாகியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அந்த மாணவர், "இஸ்ரோ தினத்துக்கு நான் தேர்வாகியதற்கு 'நான் முதல்வன்' உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் கல்வி உதவித்திட்டங்கள் முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ்நாடு அரசின் உதவி இல்லை என்றால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது.

இதற்காக முதலமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய எண்ணற்ற மாணவர்கள் அரசின் திட்டங்களை பயன்பெற்று வாழ்க்கையில் சாதித்துக் காட்ட வேண்டும்"என்று கூறியுள்ளார்.

Also Read: அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !