Tamilnadu

”எடப்பாடி பழனிசாமி Oru Soft Sangi” : கனிமொழி என்விஎன் சோமு MP கடும் தாக்கு!

அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி Oru Soft Sangi போல் செயல்படுவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து கனிமொழி என்விஎன் சோமு வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என்று முதலில் கபட நாடகம் ஆடிவிட்டு பின்னர் முதலாளிகளின் உத்தரவின்படி வெளிப்படையாக கூட்டணி என்று அறிவித்தார் பழனிசாமி. அதிமுக தலைமை என்று முதலில் சொல்லிவிட்டு பின்னர் முதுகெலும்பில்லாமல் குனிந்து குழைந்து முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அமித்ஷா அறிவிப்பார் என்று சொன்னார்.

கள்ளக் கூட்டணி பாஜகவுடன் மட்டும்தான் என்று பார்த்தால் கொள்கைக் கூட்டணி ஆர்.எஸ்.எஸ்.உடன் என்று ஐயப்பாடு ஏற்படும் வகையில் அவர்களின் செயல்திட்டத்தை oru Soft sangi போல செயல்படுத்துகிறார். மக்களை அறிவூட்டி, சமூகத்தின் படிநிலைகளை தகர்த்து எறிந்து வாழ்வில் முன்னேறவைக்கும் கல்வி நிலையங்கள் அமைப்பதை அவர்களின் முதலாளிகளின் scriptபடியே கொச்சைப்படுத்தி பேசி இருப்பது கடுமையான கண்டனத்திற்கு உரியது. சத்துணவு திட்டம் கொண்டுவந்த வரலாறு எங்களுக்கு உண்டு என்று ஒருபுறம் பெருமை பேசிவிட்டு அந்த சத்துணவு எந்த அளவிற்கு விளிம்பு நிலை மக்கள் கல்வி பெற உந்துசக்தியாக விளங்கியது என்ற புரிதலும், கல்வியை ஆயுதமாகக் கொண்டு எப்படி ஒரு சமூகமாற்றத்தை திராவிட இயக்கங்களும் திமுகழகமும் சாத்தியப்படுத்தின என்பதைப் பற்றிய உணர்வும் இல்லாமல் "கோயிலுக்கு கொடுத்த காசில் கல்லூரிகள் கட்டுகிறார்கள்" என்று ஏளனமாக குற்றச்சாட்டியதன் மூலம் முழு சந்திரமுகியாக மாறிய பழனிசாமி வெளிப்பட்டுவிட்டார்!

இந்தி திணிப்பை எதிர்த்து களம் கண்ட பேரறிஞர் அண்ணாவை பெயரிலும் கொடியிலும் தாங்கிநிற்கும் அதிமுக மும்மொழிக்கொள்கை மூலம் இந்தியை திணிக்கும் பாஜகவை ஆதரிக்கிறது. சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் முதல் தவணை நிதியான ரூ. 573 கோடியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டிக்காமல் கள்ள மவுனம் காக்கிறது. இதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்க திராணியற்று கோவில் நிதியில் கல்லூரிகள் கட்டுவதா? என்று பிதற்றிக்கொண்டிருக்கிறார்..!

நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என கல்வி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் திட்டங்களை உருவாக்கியுள்ள திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்ல எந்தவொரு தகுதியும் இந்த கோமாளிக் கூட்டத்திற்கு இனியுமில்லை..!!

ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை தனது செயல்திட்டமாக கொண்டு களமிறங்கியுள்ள அதிமுக - பாஜக கூட்டணிக்கு வருகிற தேர்தலில் மக்கள் சவுக்கடி கொடுப்பார்கள்! வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கொடுத்த காசிற்கு மேலும் கூவ வேண்டாம் அடிமை அதிமுக ரத்தத்தின் ரத்தங்களே..!!!” என தெரிவித்துள்ளார்.

Also Read: “பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!