Tamilnadu
திமுக சார்பில் அஜித்குமார் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்: வீட்டுமனை பட்டா - பணி நியமன ஆணை!
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றையதினம் (01.07.2025) அலைபேசியின் வாயிலாக அவரது தாயார் மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், இன்றையதினம் (2.7.2025) சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பணி நியமன ஆணையினை மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
மேலும், தேளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் அஜித்குமார் தாயார் திருமதி மாலதி அவர்களுக்கு வழங்கினார். இந்நிலையில், கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, கூட்டுறவுத் துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளருமான கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 5 இலட்சம் ரூபாய் நிதியினை அஜித்குமார் தாயார் மாலதி அவர்களிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!