Tamilnadu
ரூ.489 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணி.. ஜூலை 31-க்குள் முடிக்க சென்னை மாநகராட்சி உத்தரவு!
சென்னையில் ரூ.489.22 கோடியில் 3,987 சாலைகள் அமைக்கும் பணிகளை ஜூலை 31-க்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சியால் 418.56 கி.மீ. நீளமுடைய 488 பேருந்து தடச் சாலைகள் மற்றும் 5,653.44 கி.மீ. நீளமுடைய 35,978 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 266 கி.மீ. நீளத்துக்கு 375 பேருந்து சாலைகள், 2,170 கி.மீ. நீளத்துக்கு 13,909 உட்புறச் சாலைகள் உள்ளன.
அதன் தொடா்ச்சியாக, இந்த நிதியாண்டில் அனைத்து மண்டலங்களிலும் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.150 கோடியில் 203.18 கி.மீ நீளத்துக்கு 1195 சாலைகளும், நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63.22 கோடியில் 119.80 கி.மீ நீளத்துக்கு 857 உட்புற சாலைகளும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல், சிறப்புத் திட்ட நிதியின் கீழ் ரூ.180 கோடியில் 238.52 கி.மீ. நீளத்துக்கு 1,590 உட்புற சாலைகள் என மொத்தம் ரூ.489.22 கோடியில் 650.90 கி.மீ. நீளத்துக்கு 3,987 சாலைகள் அமைக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் அனைத்தும் பொறியாளா்களின் மேற்பாா்வையில், ஏற்கெனவே அமைக்கப்பட்ட பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிய சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாலைகளை மில்லிங் செய்த 5 நாட்களுக்குள் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் எனவும் சாலை அமைக்கும் பணிகளை ஜூலை 31 க்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!