Tamilnadu
”போலிப் பாசம் தமிழுக்கு பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல் இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் அலுவலல் கடிதங்களை அனுப்பி தங்களின் இந்தி பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு.
இந்நிலையில், சமஸ்கிருதத்தை மேம்படுத்த, கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 533 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு செலவு செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. மேலும் அதே காலகட்டத்தில், பாரம்பரிய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றுக்கு மொத்தமாக 147 கோடியே 56 லட்சம் ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், மாநிலத்தில், சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழிகள் ஊக்குவிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழை இந்திக்கு இணையான அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றி, சமஸ்கிருதம் போன்ற இறந்த மொழியை விட தமிழுக்கு அதிக நிதி ஒதுக்குங்கள் என வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், எந்த மாநிலத்திலும் அலுவல் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 533 கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு செலவு செய்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் இந்த ஓரவஞ்சனை செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், சமஸ்கிருத மொழிக்கு பணம். தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு நிதி ஒதுக்க முதலைக்கண்ணீர். போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு” என தெரிவித்துள்ளார்.
Also Read
- 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
 - 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!