Tamilnadu
இணையவழி தொழிலாளர்களுக்கான AC ஓய்வுக்கூடம்... இரண்டாம் கட்டமாக பாண்டி பஜாரில் விரைவில் திறப்பு !
சென்னை போன்ற பெரு நகரங்களில் Swiggy, Zomato போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களில் கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவீதம் பேர் பெண்களாக இருக்கும் நிலையில், இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது
இந்நிலையில், இந்த ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையின் முக்கிய சாலைகளில்,ஏசி ஓய்வறையை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி 600 சதுரஅடி பரப்பளவில் அமையவுள்ள இந்த ஓய்வறையில், 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும் என்றும், 25 பேர் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு 20 இரு சக்கர வாகனங்கள் வரை பார்க்கிங் செய்யும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த இணையவழி தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் சோதனை அடிப்படையில், அண்ணா நகரில் திறக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக தியாகராய நகரில் உள்ள பாண்டி பஜாரில் இணையவழி தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் விரைவில் திறக்கப்படவுள்ளது.
ஏசி மற்றும் மொபைல் ஜார்ஜிங் வசதி உடன், 25 பேர் அமரக்கூடிய வகையில் 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. டெலிவரிக்கு இடையில் ஓய்வு எடுக்கக் கூடிய வகையில் பாதுகாப்பாக சுகாதாரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்து வேளச்சேரி, மதுரவாயில், அம்பத்தூர் ஆகிய இடங்களிலும் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது
Also Read
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!