Tamilnadu
மதுரையில் 22 கி.மீ Road show : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அலைகடெலனத் திரண்டு வரவேற்ற பொதுமக்கள்!
மதுரையில், உத்தங்குடி கலைஞர் திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவனியாபுரத்தில் இருந்து வில்லாபுரம் ஜெயவிலாஸ் பணிமனை வழியாக ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரம், ஜீவா நகர், பழங்காநத்தம் வழியாக மதுரை காளவாசல், பெத்தானியாபுரம் பகுதி வழியாக ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அமைந்துள்ள திருமலை நாயக்கர் சிலை வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ரோடு ஷோ நடைபெற்றது. அப்போது சாலையில் இருபுறங்களிலும் இருந்து பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து மதுரை புதுஜெயில் ரோட்டில் மதுரை மாநகராட்சியின் முதல் மேயர் எஸ்.முத்து அவர்களின் திருவுருவ வெண்கல சிலையை திறந்துவைத்தார். வில்லாபுரத்தில் இருந்து முன்னாள் மேயர் முத்து சிலை திறப்பு விழா மேடை வரை சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பிரம்மாண்டமான ரோடு ஷோ நடைபெற்றது.
கழக பொதுக்குழு நடைபெறும் கூட்ட அரங்கின் முகப்பு தோற்றம் அண்ணா அறிவாலயம் போல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
அரங்கின் முன்பாக தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் திரு உருவப்படமும், கழகப் பொதுக்குழு கூட்ட அரங்கின் நுழைவு வாயில் தோரணத்தின் மேல் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோரின் உருவப்படும் அமையப்பெற்றுள்ளது.
அரங்கத்தின் முன்பாக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கண்கவர் பூங்கா வண்ண வண்ண மின் விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்று அதன் நடுவே கம்பீர தோற்றத்தில் நூறடி உயரத்தில் கழக இரு வண்ணக்கொடி பல கிலோமீட்டர் தூரம் பட்டொளி வீசி பறக்கின்ற வகையில் சிறப்பு தோற்றத்துடன் அமைந்துள்ளது. திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுவதால் மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 6,000 பேருக்கு கடனுதவி : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
-
ரஷ்யாவில் நிலநடுக்கம் : 12 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை - இந்தியாவை தாக்குமா?
-
வாழைப்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை என்ன? : ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய திமுக MPக்கள்!
-
வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்கள் : நாடாளுமன்றத்தில் கலாநிதி வீரசாமி MP வலியுறுத்தல்!
-
PM-KISAN திட்டத்தில் பணம் மோசடி மீது நடவடிக்கை என்ன? : மக்களவையில் முரசொலி MP கேள்வி!