Tamilnadu
நண்பரின் திருமண நிகழ்ச்சி - DJ இசையின் போது இளைஞருக்கு நேர்ந்த துயரம்!
சென்னை, புது வண்ணாரப்பேட்டை அசோக் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் சுபாஷ் சந்திரபோஸ். இவர் தனது நண்பர் ஷாம் என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நேற்று சென்றுள்ளார்.
அப்போது, நண்பர்களுடன் சேர்ந்து DJ இசை கச்சேரியில் மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டுக் கொண்டு இருந்தார். பிறகு சற்று நேரத்திலேயே நடனமாடிய படியே கீழே விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனே அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுபாஷ் சந்திர போஸின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இச்சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பரின் திருமண நிகழ்ச்சியில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!