Tamilnadu
முடிகிறது கோடை வெப்பம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு? -வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மே - ஜூன் வரை கோடை வெப்பத்தின் தாக்கம் இருந்து வரும். கடந்த ஆண்டு கூட ஜூன் மாதம் வரை அதிக வெப்ப அலையை காண முடிந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு கத்தரி வெயில் மே 4-ம் தேதி தொடங்கியது. மேலும் இது மே 28-ம் தேதி வரை இருக்கும் என்று கூறப்பட்டது. எனினும் இந்த ஆண்டு கோடை மழை காரணமாக வெப்ப அலை அதிகமாக இருக்காது என்றும் வானிலை ஆய்வாளர்களால் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்றுடன் கோடை வெப்பம் முடிவடைவதாக தமிழ்நாடு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது X தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது X தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டு தனித்துவமான ஆண்டுகளில் ஒன்றாகும்.இந்த ஆண்டு தமிழ்நாட்டில் அதிக அளவில் வெப்ப அலை காணப்படவில்லை. ஏனெனில் இந்த சென்னையில் இந்த மாதம் ஒரு நாள் கூட வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்ஸியஸை தாண்டவில்லை. கடந்த 25 ஆண்டுகளில் அதாவது 2022, 2018, 2004 ஆகிய ஆண்டுகளில் இருந்தது போல், இந்த ஆண்டின் மே மாதத்தில் இருக்கிறது.
பொதுவாக இது போன்ற வெப்பநிலை இல்லாமை என்பது மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ இருக்கும். ஆனால் தற்போது மே மத்தியிலேயே இருப்பது என்பதை முதல் முறையாக நான் பார்க்கிறேன். இதன் காரணமாக குறைந்த காற்றழுத்தம் ஏற்படுத்தக் கூடும். எனவே இந்த மாத இறுதியில் அரபிக் கடல், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது.
அடுத்த 10 நாட்களில் அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு - மேற்கு பகுதியில் காற்று சுழற்சியானது வடதமிழகம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு கடலோரங்களில் நெருங்கி வருகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், நாகை , மயிலாடுதுறை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. பெங்களூரிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!