Tamilnadu
"இதுவரை 7,560 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது" - அமைச்சர் சேகர் பாபு !
சென்னை மண்ணடி, தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற உள்ள திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்திததார்.
அப்போது பேசிய அவர், "இன்று மட்டும் 8 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள தம்பு செட்டி தெருவில் இருக்கும் காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் சுமார் 1 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் 17 திருப்பணிகள் நடைபெற உள்ளது. அதனை இன்று தொடங்கி வைத்து உள்ளோம். இந்த கோயிலில் வருகின்ற 28 ஆம் தேதி வெள்ளி தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதுவரை 2,956 கோவில்களில் குடமுழுக்கு நடந்து உள்ளது. வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி 3 ஆயிரம் ஆவது குடமுழுக்கு நடைபெற உள்ளது. நாகை மாவட்டம் திருப்புகழூரில் உள்ள திருக்கோவிலில் நடைபெற உள்ள 3 ஆயிரமாவது குடழுழுக்கு விழாவிவ் துறை அமைச்சர் என்ற முறையில் கலந்து கொள்ள உள்ளேன். இதுவரை 7 ஆயிரத்து 560 ஏக்கர் அளவிலான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நில அளவு கற்கள் இரண்டு லட்சதை நிறைவு செய்ய இருக்கிறோம்"என்று கூறினார்.
அப்போது, நீங்களும் உதயநிதியும் மெல்ல மெல்ல சனாதானத்தை ஏற்றுக்கொண்டதால் தான் கோயில்களில் அன்னதான உணவுகளை வழங்கி வருகிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "கைப்பட்டால் குத்தம் கால் பட்டால் குத்தம் என்று தமிழிசை பேசி வருகிறார். பழுத்த மரத்தில் தான் கல்லடிப்படும் என்பது போல் துணை முதல்வர் இன்று புகழ் உச்சியில் இருக்கிறார். தளபதிக்கு தோள் கொடுத்து சுமக்க தயாராக இருக்கிறார். அதனால் தான் இது போன்ற விமர்சனங்கள் வருகிறது. இறைப்பசியோடு வருபவர்களுக்கு வயிற்று பசியும் போக்கும் ஆட்சி தான் நடத்து வருகிறது" என தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ் கலச்சாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்காது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக தான் சம்பந்தம் உள்ளது. அதுக்கு முன்பாக எந்த சம்பந்தமும் தமிழ்நாட்டோடு கிடையாது. தமிழ் மொழியே இங்கு வந்து தான் கற்றுக் கொள்கிறேன் எனக் கூறுகிறார். அவர் தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என தெரிவித்தார்"என்று கூறினார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!