Tamilnadu
TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம்!
TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று,சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 16.05.2025 முதல் 31.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும், ஜூன் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் , சென்னை
Also Read
-
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் நான்கு கேள்விகளுக்கு பதிலுண்டா? : விஜய்க்கு, தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
-
தங்க மோதிரம் என்ன விஜய் வீட்டு பணமா? : முரசொலி தலையங்கம் அடுக்கடுக்காக கேள்வி!
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!