Tamilnadu

“நாங்கள் தவித்தபோது எங்களுக்கு உதவியது தமிழ்நாடு அரசு”: பஞ்சாபில் இருந்து சென்னை வந்த மாணவர்கள் உருக்கம்!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு-காஷ்மீர்,பஞ்சாம் உள்ளிட்ட எல்லைப் பகுதியில் படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

மேலும், புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவிமையம் தொடங்க உத்தரவிட்டு, அதனடிப்படையில் உதவி மையம்தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கல்லூரி படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர்கள் 39 பேர் பத்திரமாக டெல்லி அழைத்துவரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 5 மாணவர்கள் இன்று விமானம் மூலம் சென்னை வந்தனர்.

இந்த மாணவர்களை அயலகத் தமிழர் நலத்துறை துணை இயக்குனர் புகழேந்தி வரவேற்றார். இவர்களுக்கு சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டடுள்ளது. மேலும் இன்று மதியம் சில மாணவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வருகிறனர்.

”நாங்கள் இருந்த 60 கி.மீ தொலைவில்தான் எல்லைப்பகுதி இருந்ததால் அங்கு பதற்றமாகவே இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நாங்கள் தவித்தபோது, தமிழ்நாட்டு அரசு அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டபோதுதான் நம்மதி வந்தது. பிறகு எங்களை பத்திரமாக அழைத்து வந்தனர். நாங்கள் தாயகம் திரும்ப உதவிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி” என பஞ்சாபில் இருந்து சென்னை திரும்பிய மாணவர்கள் கூறியுள்ளனர்.

Also Read: திருநெல்வேலியின் மாபெரும் நூலகத்திற்கு கண்ணியத்திற்குரிய ‘காயித மில்லத்’ பெயர்!: முதலமைச்சர் அறிவிப்பு!