Tamilnadu
12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு : தேர்வு முடிவு தேதி வெளியீடு!
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இப்பணி அண்மையில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் காலை 9 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
தேர்வு முடிவுகளை https://resultsdigilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் பள்ளியிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அதேபோல் பள்ளியில் மாணவர்கள் கொடுத்து இருக்கும் கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்து வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!