Tamilnadu
”கருப்பு, சிவப்பு வேட்டியை பார்த்தாலே சிலருக்கு பயம்” : ஆ.ராசா MP அனல் பேச்சு!
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் (தொமுச) சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளையும், மே தினத்தையும் முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய ஆ.ராசா எம்.பி,"தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், முதலமைச்சர் பிறந்த நாளையும், மே தின விழாவையும் இணைத்து சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது மகிழ்சியாக உள்ளது. சிவப்பு உடையில் தலைவர் மிடுக்காக வருவது கம்பீரமாக இருக்கும். வழக்கறிஞர்கள் சமூகத்திற்கு இணையாக புலமைப்பெற்வர்கள் தொ.மு.சவினர்.
தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் நான் கலைஞரின் கொள்கை வாரிசு என்பதை நிரூபித்து வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உலகத்தை மாற்ற வேண்டும் என்று என்னிய காரல் மார்ஸ்-சின் கொள்கையை கொண்ட நாட்டிலேயே அவரது சிலை உடைக்கப்படுகிறது. ஆனால் காரல் மார்க்ஸ் சிலையை தமிழ்நாட்டில் எழுப்புகிறார் முதலமைச்சர்.
நீட் தேர்வு வேண்டாம் என்று முதன் முதலில் சொன்ன மாநிலம் தமிழ்நாடு. ஏன் நாடாளுமன்றத்திலேயே நீட் தேர்வு வேண்டாம் என்று சொன்ன மாநிலமும் நாம்தான். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து கழக அரசு முன்னெடுத்து வருகிறது.
கருப்பு, சிவப்பு வேட்டியை பார்த்தாலே சிலருக்கு பயம் வந்துவிடுகிறது. இதற்கு காரணம் நாங்கள் அல்ல. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் கொள்கை தத்துவத்துவத்தை தாங்கிப் பிடித்து எங்களை வழிநடத்திச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் இதற்கு காரணம். தத்துவம் சரியாக இருந்தால் மட்டும் போதாது, அதனை தாங்கி பிடிக்கும் நேர்மையான ஒரு தலைவன் வேண்டும். நமக்கு அப்படி ஒரு தலைவன் இருக்கிறார். அதனால் தான் நாம் துணிந்து சென்று கொண்டே இருக்கிறோம்.
சாதி கண்ணுக்கு தெரியாது. அது மூளையில் உள்ளது. கிராமத்தில் தெருக்களின் பெயர் உள்ளது. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தெரு என்று உள்ளது. அதனை உடைக்க எண்ணி எல்லா சமூகத்தினரையும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சமத்துவபுரத்தை கொண்டு வந்தவர் கலைஞர். தற்போது காலனி என்பதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று 'காலனி' என்ற சொல்லை நீக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
மூளையை தின்னும் அமீபா வைரஸ் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்!