Tamilnadu

Mayonnaise-க்கு ஓராண்டு தடை விதித்தது தமிழ்நாடு அரசு : காரணம் என்ன?

மையோனைஸ் என்பது முட்டை மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் மசாலா பொருட்கள் கலந்த ஒரு உணவுப்பொருள். இதை தயாரிக்க பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. முறையற்ற வகையில் மையோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மையோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தினை படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுவதாகவும், பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மையோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிப்பதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ந் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு... பொதுமக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!