Tamilnadu

மன்னார்குடி, ஆடுதுறை பேருந்து நிலையங்கள் பெயர் விவகாரம் : பொய் பேசி மாட்டிக்கொண்ட சீமான் - பின்னணி?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக, பாஜக, நாம் தமிழர் என பலரும் ஆட்சியை பற்றி அவதூறு பரப்புவதில் முனைப்புக் காட்டி வருகிறது. தின்தோறும் ஒரு பொய் என வீதம் செயல்பட்டு வருகிறது அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகள். சீமானின் பொய்யை தாங்க முடியாமல் அந்த கட்சியினரே அதில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்த சூழலில் தற்போது சீமான் மேலும் ஒரு பொய்யை பரப்பும் நோக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், "மன்னார்குடி பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையம், ஆடுதுறை காயிதே மில்லத் பேருந்து நிலைய அங்காடி பெயரை மாற்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரை வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக" குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இதற்கு தமிழ்நாடு சரிபார்ப்பகம் (TN Fact Check) விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கம் வருமாறு :

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு ஏற்கனவே உள்ள பெருந்தலைவர் காமராஜர் பெயரை மாற்றுவது தொடர்பாக எந்தத் திட்டமும் இல்லை என்று நகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேருந்து நிலையத்துக்கு 1975 ம் ஆண்டிலேயே டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பெயர் சூட்டப்பட்டு இயங்கி வருகிறது. அங்குள்ள 6 வெளிப்புற கடைகளுக்குக் காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டிருந்தது. தற்போது, புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய கடைகளுக்கும் காயிதே மில்லத் பெயரைச் சூட்ட ஆடுதுறை பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Also Read: “அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!