Tamilnadu
சென்னையின் புதிய பெருமை - Renault நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு கூடம் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் உற்பத்தித்துறை பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. மின்னணு உற்பத்தியில், தமிழ்நாடு அடைந்திருக்கிற வளர்ச்சி, நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஃபிரான்சு நாட்டின் Renault நிறுவனம் தமிழ்நாட்டில் மாபெரும் வடிவமைப்பு கூடத்தை அமைத்துள்ளது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.
இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “உலக நாடுகளுக்கான பிரெஞ்சு கார்களை வடிவமைக்கும் நகரம் என்ற புதிய பெருமையைப் பெற்றுள்ளது நம் சென்னை!
Renault நிறுவனம், ஃபிரான்சுக்கு வெளியே, தங்களது மிகப்பெரிய வடிவமைப்புக் கூடத்தை தற்போது சென்னையில் திறந்துள்ளது.
இத்தகைய கூடங்கள் தமிழ்நாட்டை உலகத் தரத்திலான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் நவீன ஆட்டோ தொழில்நுட்பங்களுக்கான மையமாக மாற்றும் ஒரு தெளிவான முன்னேற்றக் குறியீடுகளாக அமைகின்றன.
இந்த மையம் Renault-ன் ‘renault.rethink’ முழுமையான புதிய தொலைநோக்கிலான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும். இது இந்திய "மார்க்கெட்" பற்றிய அவர்களின் நீண்டகால நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் வலியுறுத்துகிறது.
உலகின் முன்னணி கார் உற்பத்தி மையமாக உள்ள தமிழ்நாடு, இப்போது வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் உயர் நுட்ப பொறியியல் சேவைகளுக்கான சக்திவாய்ந்த மையமாகவும் உயர்ந்து வருகிறது. இது தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் வளர்ச்சி. முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு!” என பதிவிட்டுள்ளார்.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!