Tamilnadu
ரூ.2 ஆயிரம் பொங்கல் கருணைக்கொடை : யாருக்கு இந்த நிதி கிடைக்கும்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுது. இதில் அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1.திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழுநேர வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு. பகுதிநேர மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
2.1,907 திருக்கோயில்களுக்கு ரூ.225 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும்.
3. காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்கள் சார்பாக புதிய செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.
4. திருச்செந்தூர், திருவரங்கம், இராமேசுவரம் உள்ளிட்ட 10 திருக்கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் பக்தர்களுக்கான தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும்.
5. கோயம்புத்தூர், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பாக புதிய பல்தொழில்நுட்ப கல்லூரி (பாலிடெக்னிக் கல்லூரி) அமைக்கப்படும்.
6.திருச்சி, திருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக புதிய கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி அமைக்கப்படும்.
7. துறைநிலை ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
8.சேமநல நிதி ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
9. நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் மேலும் 5 திருக்கோயில்களுக்கு இவ்வாண்டு விரிவுபடுத்தப்படும்.
10.மாதந்தோறும் பௌர்ணமி தினத்தில் தற்போது 20 பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களில் நடைபெற்று வரும் 108 திருவிளக்கு வழிபாடு, மேலும் 5 அம்மன் திருக்கோயில்களுக்கு இவ்வாண்டு விரிவுபடுத்தப்படும்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!