Tamilnadu
தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் உள்ளிட்ட 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணம்- TNSTC அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பு ஆகிய தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் சிரமமின்றி பயணிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இவ்வாறு இயக்கப்பட்ட பேருந்துகளில் ,32,695 பயணிகள் பயணித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பு முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (12.04.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படியும் மற்றும் இன்று (13.04.2025) அதிகாலை 02.00 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் 1,153 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,245 பேருந்துகளில் 1,78,475 பயணிகள் பயணம் செய்தனர். "
11.04.2025 அன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் 2,092 மற்றும் 712 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,54,220 பயணிகள் பயணம் செய்தனர்.ஆக கடந்த 11.04.2025 முதல் இன்று (13.04.2025) அதிகாலை 02.00 மணி வரை 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர்"என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!