Tamilnadu
திருநெல்வேலி :ரூ. 46.55 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு !
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் கேள்வி பதில் நேரத்தின்போது,ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் "ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூர் ஒன்றியத்தில் உள்ள கிராம பகுதிகளுக்கு 55 லிட்டர் தண்ணீரும், கீழப்பாவூர் பேரூராட்சிக்கு 100 லிட்டர் தண்ணீரும் கொடுப்பதற்கு 3 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தேன்.
அதன் அடிப்படையில் தற்போது கடையம் மற்றும் கீழப்பாவூர் ஒன்றியம் பேரூராட்சிக்கு திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அதில் கடையநல்லூர், செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட நகராட்சிகளும் ஒப்பீடு செய்யப்பட்டு திட்டம் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
அந்தத் திட்டம் வந்தால் இந்த அனைத்து பகுதிகளுக்கும் 55 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்பதால் 10 ம் தேதி அன்று உயர்நிலைக் கூட்டத்தை கூட்டி இருக்கிறீர்கள் என்று அறிந்தேன். அந்தக் கூட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படுமா?"என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த, அமைச்சர் கே.என்.நேரு, "ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 163 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 46.55 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்காக தாமிரபரணி நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 8.5 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் அனைத்து பணிகளும் நிறைவுற்று 10.2.2024 முதல் கடையம், பாப்பாக்குடி, கீழப்பாவூர் உள்ளிட்ட 163 கிராமங்களுக்கு நாள் ஒன்றுக்கு 40 லிட்டர், கீழப்பழுவூர் பேரூராட்சிக்கு 90 லிட்டரும் கொடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குடிநீர் வடிகால் வாரியத்தை பொருத்தவரை பத்தாண்டு காலத்தில் எவ்வளவு மக்கள் தொகை விரிவடையும் என கணக்கிடப்பட்டு, அதற்கும் சேர்த்து தான் திட்டம் வகுக்கப்படும். சில இடங்களில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது குழாய் உடைந்தோ, பழுதுபட்டோ இருக்கலாம். அதனை சரி செய்வதற்கு ஆறு மாதம் காலங்கள் எடுக்கும்"என்று கூறினார்.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!