Tamilnadu
நீலகிரியில் திரைப்பட சூட்டிங் எடுக்க தற்காலிக தடை : காரணம் என்ன ? முழு விவரம் உள்ளே !
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா மாவட்டமாகும். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 30 முதல் 34 லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர் .
குறிப்பாக ஏப்ரல், மே காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒட்டுமொத்தமாக உதகையில் குவிவதால் ,சுற்றுலா பயணிகள் பல சுற்றுலா மையங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் கோடி சீசன் துவங்க உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால். நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தங்கு தடை இன்றி அனைத்து சுற்றுலா ஸ்தலங்களை கண்டு ரசித்து செல்லவும் ,போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நீலகிரிக்கு வர EPASS திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 6000 வாகனங்களும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாட்களில் 8000 வாகனங்களுக்கு இ பாஸ் வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுலா பயணிகள் தங்கு தடை இன்றி, போக்குவரத்து நெரிசலை தவிர்த்து நீலகிரிக்கு சுற்றுலா வந்து செல்ல முடியும்.
இந்த நிலையில், நீலகிரியில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் ஐந்தாம் தேதி வரை திரைப்பட சூட்டிங் எடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில், "மே மாதம் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, நேரு பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பல கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகளை கவர நடத்தப்பட இருப்பதால் பராமரிப்பு பணிக்காக உதகை தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து தோட்டக்கலைத் துறை சொந்தமான பூங்காக்களில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் ஐந்தாம் தேதி வரை திரைப்பட சூட்டிங் எடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!