Tamilnadu

காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரி! : சட்டப்படிப்புகள் குறித்து அமைச்சர் ரகுபதி தகவல்!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், 2025 - 26 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்புடன், கடந்த மார்ச் 14ஆம் நாள் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விடையளிக்கும் வகையில், வினா - விடை நேரம் நடைபெற்று வருகிறது.

அதன் பகுதியாக, சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு, விடையளிக்கும் போது பேசிய அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாட்டில் 15 அரசு சட்டக் கல்லூரிகள், 12 தனியார் சட்டக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் 15 சட்டக்கல்லூரிகள், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளி, திருச்சியில் தேசிய சட்டப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் 36,640 மாணவர்கள் 5 ஆண்டுகால சட்டப்படிப்பையும், 11,910 மாணவர்கள் 3 ஆண்டுகால சட்டப்படிப்பையும் பயின்று வருகின்றனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் 1.75 வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 9,000 வழக்கறிஞர்கள் புதுப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரில் புதிதாக சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Also Read: காவல்துறை மீது திட்டமிட்டு பழி.. பெண்களுக்கு அச்சுறுத்தல்... பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!