Tamilnadu
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து : இணைய சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல் !
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் சி.சி.டி.வி கண்ட்ரோல் அறை கீழ் தளத்தில் செயல்படுகிறது. அதன் முதல் மாடியில் ரயில்வே டெலி கம்யூனிகேசன் மையம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று பிற்பகலில் 5-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கரும்புகை வந்தது.
அடுத்த சில நிமிடங்களில் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அதைப்பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அந்த அலுவலகத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எழும்பூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து விரைந்து வந்த வீரர்கள் சில நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் கம்யூனிகேசன் மையத்திலிருந்து கம்ப்யூட்டர் மானிட்டர்கள் உள்பட எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தீ விபத்து நடந்த இடத்தை ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இந்த கம்யூனிகேசன் சென்டரில் ரயில்வே தொடர்பான தகவல்கள் பகிரப்படும். குறிப்பாக இணைய சேவைகளும் இந்த மையத்தின் சர்வர் மூலம் வழங்கப்படும். தற்போது தீ விபத்து ஏற்பட்டதால் இந்த சேவை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் ரயில்வே சேவையிலும் சிக்னலிலும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் அந்த அறையிலிருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை காப்பாற்றியிருப்பதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“துறை செயலாளர் இல்லாமல் திண்டாடும் வேளாண் துறை” : தூங்குமூஞ்சி த.வெ.க அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
பாமாயில் விவகாரம் : “3 மாதத்தில் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்?” - தவெக அரசை அம்பலப்படுத்திய உதயநிதி!
-
தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது? : த.வெ.க அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி!
-
🔴LIVE UPDATES: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் - வாக்குச்சாவடியில் முறைகேடு செய்யும் தவெக!
-
துவரம் பருப்பு கொள்முதல் விவகாரம் : வழக்கம்போல் திமுக மீது பொய் பழி... ஸ்டிக்கர் ஒட்டும் தவெக... விவரம்!