Tamilnadu

புல்லட்டில் சென்று கஞ்சா விற்பனை... அதிமுக பிரமுகர் கைது... 1,100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார்!

கடந்த அதிமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை பெருமளவில் நடந்து வந்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக கஞ்சா வேட்டையை தொடங்கியது. தொடர்ந்து 'ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O தொடங்கி 4.O வரை உருவாக்கி போலீசார் பல கிலோ கஞ்சாக்களை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா வேட்டையில் சிக்கிய பலரும் அதிமுக, பாஜகவை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இந்த சூழலில் தற்போது புல்லட்டில் சென்று கஞ்சா விற்பனை செய்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர் காட்டு ராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் 10-வது தெருவில் வசித்து வருபவர் காட்டு ராஜா. அதிமுகவை சேர்ந்த இவர், ஒரு சில தொழில்களை செய்து வருகிறார். இந்த சூழலில் மணலூர்பேட்டை சாலையில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்பி சுதாகருக்கு புகார் கிடைத்தது. அதன்பேரில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அந்த சமயத்தில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அதிமுக பிரமுகர் காட்டு ராஜாவை மடக்கிய போலீசார் அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது புல்லட் பைக்கில் சுமார் 1,100 கிலோ கஞ்சா கிடைத்தது. இதனை பார்த்து அதிர்ந்த போலீசார், காட்டு ராஜாவின் புல்லட் பைக்கை பறிமுதல் செய்ததோடு, அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து காட்டு ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நகர காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். புல்லட்டில் சென்று கஞ்சா விற்பனை செய்து வந்த திருவண்ணாமலையை சேர்ந்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Also Read: கல்வி உதவித்தொகை பெருவதற்கான வருமான வரம்பினை அதிகரிக்க வேண்டும்! : பி.வில்சன் வலியுறுத்தல்!