Tamilnadu
”ஒவ்வொரு ஊருக்கும் ஒரு திட்டம்” : நிதிநிலை அறிக்கைக்கு பொருளாதார நிபுணர் ஆனந்த சீனுவாசன் பாராட்டு!
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையானது, சமுதாயத்தில் ஒவ்வொரு பிரிவினரையும் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்று பொருளாதார நிபுணர் ஆனந்த சீனுவாசன் பாராட்டியுள்ளார்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நிதிநிலை அறிக்கையை பாராட்டி பேசிய ஆனந்த் சீனிவாசன்,” இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு செக்டரையும் அவர் கவனத்தில் பிடித்து இருக்கிறார். இதனைவிட எனக்கு மிகவும் பிடித்து இருப்பது விலங்கு களுக்கென்று ஒரு சரணாலயம் கிரியேட் செய்ய வேண்டும் என்று செய்து இருக்கிறார்கள்.
அதே மாதிரி சென்னையில் குடிநீர் பிரச்சினை வரும் . அந்த குடி நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இன்னொரு நீர்த்தேக்கம் கிரியேட் செய்ய வேண்டும் அப்படி என்று முடிவு யெடுத்து இருக்கிறார்கள். அதே மாதிரி சென்னையில் ட்ரான்ஸ் போர்ட் பிரச்சினைக்கு அடுத்த ஆறு மெட்ரோ ரெயில் பிளான் இருக்கிறது. அதற்கு முன் அவினாசி, சத்தியமங்கலத்திற்கு ஒரு மெட்ரோ 8000 கோடி என்று நினைக்கிறேன். அதற்கான பிளானை சென்ட்ரல் கவர்ண் மென்ட்டிடம் கொடுத்து இருக்கிறோம். அதனை அவர்கள் பரிசீலனை செய்யாமல் இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
தூத்துக்குடியாக இருக்கட்டும், திருநெல்வேலியாக இருக்கட்டும், ஓசூராக இருக்கட்டும் எல்லா மாவட்டங்களுக்கும் ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தொழிற்காலை அறிவித்து இருக்கிறார்கள். ஓசூரில் ஒரு நாளேஜ் காரிடர் (அறிவுசார் பெருவழிச்சாலை) அறிவிச்சு இருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து மாமல்ல புரம் எப்படிஒரு ஐ, டி. கேரிடரிா அறிவிச்சு இருக்கிறார்களோ அதே மாதிரி பெங்களூருக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் இரண்டு மணிநேரம் ஆகுறது என்பதினாலே அதனை ஓசூரில் இதனை யூஸ் செய்து இன்றைக்கு ஓசூர் பெங்களூருக்கும் இடையே ஒரு லிங்க் சிட்டி மாதிரி ஆகி இருக்கு ஒரு பார்டல் தான் ஆகிஇருக்கிறது.
அதனால் ஓசூரை அதே மாதிரி மாற்ற இருக்கிறார்கள். அதே மாதிரி கள்ளக்குறிச்சி, தூத்துக்குடியில் ஒன்று சொல்லி இருக்கிறார்கள். இன்பாக்ட் ஓசூரில் ஒரு டைட்டல் பார்க் அறிவித்து இருக்கிறார்கள். இதே மாதிரி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு திட்டம் இருக்கிறது" என பாராட்டியுள்ளார்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!