Tamilnadu
2025 - 26 நிதிநிலை அறிக்கை : சென்னைக்கான அறிவிப்புகள் என்ன?
இந்தாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இக்கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அதில் இடம் பெற்ற சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-
1. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும். இதற்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு.
2. முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் மூலம் 6100 கி.மீ நீளம் சாலைகள் மேம்படுத்தப்படும். ரூ.2200 கோடி நிதி ஒதுக்கீடு.
3. சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் 25,000 புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு.
4. சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் ரூ.88 கோடியில் அமைக்கப்படும்.
5. 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் ரூ.675 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படும்.
6. திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளில் ரூ.400 கோடியில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
7. சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகத்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம். ரூ.2423 கோடி நிதி ஒதுக்கீடு.
8. சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
9. வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ நீளத்திற்கு ரூ.310 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும்.
10. கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரூ. 70 கோடியில் அமைக்கப்படும்.
11 . கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி ரூ.3450 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
12 வட சென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.6,858 கோடி நிதி ஒதுக்கீடு.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!