Tamilnadu
“விஜய்க்கு சினிமா முதலமைச்சர் வேறு நிஜ முதலமைச்சர் வேறு என்பது தெரியவில்லை” - நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கு!
சென்னை அருகே அயப்பாக்கத்தில் வில்லிவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி தலைமையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம், அமைச்சர் சாமிநாதன், நடிகர் எஸ்.வி.சேகர், எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது, "உலகத்திலேயே வலிக்காத சவுக்கு கோயம்புத்தூரில் தான் கிடைக்கிறது. அத்தனை அடி அடித்தும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒரு காயம் கூட இல்லை. செருப்பு போட மாட்டேன் என்றார், ஆனால் ஷூ போட்டு செல்கிறார். செருப்புதானே போட மாட்டேன் என்றார், அதனால்தான் ஷுஅணிந்து செல்கிறார் போல. வாயைத் திறந்தால் பொய் தான் பேசுகிறார் அண்ணாமலை.
தேசவிரோதி என்று சொல்ல யாருக்கும் தகுதி இல்லை. இந்தியாவில் பிறந்தால் இந்தியன். தமிழ்நாட்டில் பிறந்தால் தமிழன் அவ்வளவுதான். தேசவிரோதி என்று குறிப்பிடுபவரை லூசு என்றுதான் சொல்ல வேண்டும். தேசத்திற்குள் தமிழ்நாடு இல்லையா? இதில் என்ன தேசவிரோதம்? தமிழ்நாட்டிற்கு விசுவாசமாக இருந்தாலே அது தேசத்திற்கு விசுவாசமாக இருந்தது போல்தான்.
நகைச்சுவை சக்கரவர்த்தி என்று என்னை கூற வேண்டாம், பாஜக தலைவர் அண்ணாமலையை நகைச்சுவை சக்கரவர்த்தி என்று கூறுங்கள். விஜய்க்கு சினிமா முதலமைச்சர் வேறு நிஜ முதலமைச்சர் வேறு என்பது தெரியவில்லை. விஜய் படத்தை ஒரு கோடி பேர் பார்த்தால் கூட ஹிட் ஆகும். ஆனால் இங்கு 10 கோடி பேர் சேர்ந்தால்தான் முதலமைச்சராக முடியும். நான் எந்த கட்சியும் இல்லாமல் ஒரு நடிகனாக இந்த அரசின் திட்டங்களை வரவேற்கின்ற முதலமைச்சரின் நண்பனாக இருக்கின்றேன்." என்றார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!