Tamilnadu

நீட் சட்ட முன்வடிவு முதல்... : ஜெ.பி.நட்டாவிடம் 9 கோரிக்கைகளை முன்வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (4.3.2025) புதுடெல்லியில், ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா அவர்களிடம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்நாடு தொடர்பான மருத்துவத் துறையின் கோரிக்கைகள் வழங்கினார்கள்.

அதன் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு. ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் நடைமுறைக்கு எதிரான சட்ட முன்வடிவுக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத்தரக் கோருதல்.

கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி கோருதல்

தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல்

தமிழ்நாட்டில் 24 நகர்ப்புற மற்றும் 26 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 500 துணை சுகாதார நிலையங்களுக்கு அனுமதி வழங்க கோருதல்

தேசிய மருத்துவ ஆணையத்தின் தேசிய வெளியேறும் தேர்வு விதிமுறைகள், 2023 மீதான ஆட்சேபணை தெரிவித்தல்

பொது கலந்தாய்வுத் தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் பட்டப்படிப்பு மருத்துவக் கல்வி விதிமுறைகள் 2023க்கு ஆட்சேபணை தெரிவித்தல்.

தேசிய மருத்துவ ஆணையத்தின். "புதிய மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல். புதிய மருத்துவப் படிப்புகளைத் தொடங்குதல், தற்போதுள்ள படிப்புகளுக்கான இருக்கைகள் அதிகரிப்பு & மதிப்பீடு மற்றும் மதிப்பீட்டு விதிமுறைகள், 2023" மீதான ஆட்சேபணை தெரிவித்தல்

ரூ.447.94 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டில் புற்றுநோய் பராமரிப்பு சிகிச்சை மற்றும் சேவைகளை மேம்படுத்துதல்.

22 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ. 603.45 கோடி மதிப்பீட்டில் நரம்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்தி திறன் ஆய்வகங்கள் அமைத்தல்.

உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனுவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

Also Read: ”தொகுதி மறுசீரமைப்பு மோடி அரசின் சதி திட்டம்” : ஆ.ராசா MP குற்றச்சாட்டு!